எல்பிஎல் போட்டித்தொடரில் கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 146 ஓட்டங்களைப் பெற்றது.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய துனித் வெல்லாலகே 9 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜப்னா கிங்ஸ் அணிக்காக நிஷான் மதுஷ்க 46 ஓட்டங்களைப் பெற்று சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக் கொடுத்தார்.
அதன்படி 14 ஓவர்கள் 3 பந்துகள் முடிவில் ஜப்னா கிங்ஸ் அணி 150 ஓட்டங்களை குவித்து வெற்றி இலக்கை கடந்தது.