05.01.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணி வானிலை அவதானிப்பு.
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நாளை மறுதினம் (07.01.2025) காற்றுசுழற்சி ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது. இது எதிர்வரும் 08.01.2025 முதல்மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக எதிர்வரும் 08.01.2025 முதல் 12.01.2025 வரை வடக்குமற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானதுவரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
அத்தோடு இந்த மழை 12 ம் திகதியைத் தாண்டியும் தொடரும் வாய்ப்புள்ளது. ஏனெனில் எதிர்வரும் 12.01 2025 அன்று மீண்டும் ஒரு காற்றுச் சுழற்சி ஒன்றுதென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகும் வாய்ப்புள்ளது ( அடுத்த சிலநாட்களின் பின்னரே இதனை உறுதிப்படுத்த முடியும்).
எனவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் விவசாயிகள் மேற்குறிப்பிட்டநாட்களைக் கருத்தில் கொண்டு தமது நெல், உழுந்து மற்றும் பயறு போன்றஅறுவடைச் செயற்பாடுகளை மேற்கொள்வது சிறந்தது.
எதிர்வரும் 09.01.2025 முதல் 12.01.2025 முதல் வடக்கு மற்றும் கிழக்குமாகாணங்களின் கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும். எனவேமீனவர்கள் இந்நாட்களில் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது.