இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் நெடுந்தீவு கிளையினால் தற்போதைய கொவிட் 19 பரம்பல் தன்மையினைக் கருத்திற் கொண்டு பாதுகாப்பு செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றது.
நாளாந்தம் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் நிலமைகளைக் கருத்திற் கொண்டு மக்கள் கூடும் அரச திணைக்களங்கள், வியாபார ஸ்தலங்கள் வங்கி, போக்குவரத்து படகுகள் போன்ற இடங்களில் தொற்று நீக்கி மருந்துகள் நேற்றைய தினம் (ஜீலை 29) விசிறப்பட்டன. அததுடன் கிராம சேவையாளர்களுக்கு கொவிட் பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்பட்டன.
நெடுந்தீவில் கொவிட் கடமைகளில் தனியாக பொதுச்சுகாதார பரிசோதகர் மாத்திரமே கடமையில் ஈடுபடுவதால் அந்நிலமையினைக் கருத்திற் கொண்டு இன்று முதல் 03 மாதங்களுக்கு உதவியாளர் ஒருவரை நாளந்தம் 1000.00 கொடுப்பனவு வழங்கி நியமித்து இருப்பது வரவேற்கத்தக்க விடயமாகும்.