சுற்றுலாத்துறை தந்திரோபாய திட்ட தயாரிப்பிற்கான பயிற்சி பட்டறை இடம் பெற்றது.
நெடுந்தீவு பிரதேசத்தில் நிலைபேறான சமூக அடிப்படையிலான சுற்றுலாத்துறையினை வளப்படுத்தும் நோக்குடன் தந்திரோபாயா திட்டங்களை தயாரிப்பதற்கான பயிற்சி பட்டறை இன்றைய தினம் (ஜீலை 09) நெடுந்தீவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில இடம் பெற்றது.
எதிகாலத்தில் நெடுந்தீவில் சுற்றூலா துறையினை வளப்படுத்துவதன் ஊடாக மக்களது வாழ்வாதரங்களிலும் ஏனைய சமூக மாற்றங்களிலும் முன்னேற்றத்தினை ஏற்படுத்தும் நோக்குடன் இச் செயற்பாடு இடம் பெற்றது.
நெடுந்தீவில் சுற்றுலாத்துறை சார்ந்து செயற்படும் நபர்கள் அழைக்கப்பட்டு அவர்களது கருத்துக்கள் உள்வாங்கப்பட்டு அது தொடர்பாக ஆலோசனைகள் பெறப்பட்டன.
வடமாகான சுற்றுலாத்துறை நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட இச் செயலமர்வில் சுற்றுலாத்துறையின் தலைவர் மதிப்பிற்குரிய ஸ்ரான்லி மஸ்கோன் அவர்கள், பிரதேச செயலாளர் அவர்கள் கிராம சேவையாளர்கள் சுற்றுலாத்துறை சார்ந்து செயற்படும் நபர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
வடக்கின் தீவுகளுக்கான நெடுந்தீவை மையப்படுத்திய தந்திரோபாய திட்ட வரைபினை சுற்றுலாத்துறை சார்ந்து பணியாற்றும் யாழ் பல்கழைக்கழக திட்டமிடல் கல்வியினை நிறைவு செய்த மாணவிகள் இருவர் நெடுந்தீவில் தங்கியிருந்து இச் செயற்றிட்டத்தினை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சுற்றுலாத்துறையூடாக கலையினை வளர்க்கும் நோக்குடன் நெடுந்தீவு சார்ந்த கலை மேம்பாடு தொடர்பான பயிறிசிப் பட்டறையும் பிரதேச செயலகத்தில் கடந்த நான்கு நாட்களாக இடம் பெற்றன இதில் நெடுந்தீவு சார்ந்த ஓர் கலைக்குழுமம் உருவாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கொவிட் 19 சமூகப்பாதுகாப்புடன் மேற்குறிப்பிட்ட செயற்பாடுகள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.