தற்போது நடைபெற்று முடிந்த பாரளுமன்றத் தேர்தலில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னனி சார்பில் பாரளுமன்றம் செல்லவுள்ள திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செல்வராச கஜேந்திரன் மற்றும் தமிழ் மக்கள் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் தங்களுடன் ஒன்றிணைந்து பயணிக்குமாறு தமிழ்தேசியக் கூட்டமைப்பு சார்பாக பாரளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்ட திரு.சுமந்திரன் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த காலங்களில் அனைவரும் ஒன்றாக இருந்து ஆட்சி செய்தபோதும் பல்வேறு காரணங்களை காட்டி தமிழ் கட்சிகள் யாவும் பிரிந்து சென்று தமிழர் ஒற்றுமை தற்போது சீர்குலைந்த நிலையில் காணப்படுகின்றது
தமிழ் பிரதிநிதித்துவத்தினை முன்னிறுத்தி பாரளுமன்றம் செல்கின்ற பாரளுமன்ற உறுப்பினர்கள் அங்கு சென்று தங்களுக்குள் கருத்து முரன்பாடுகள் இன்றி ஒற்றுமையுடன் வடக்கு கிழக்கு மக்களது அபிவிருத்திக்கும் உரிமைக்கும் இணைந்து பயணிக்க வேண்டியது மிக முக்கியமாக கடமையாக காணப்படுகின்றது.