“நேற்று முன்தினம்(18) வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றிருக்க வேண்டிய விவாதத்தில் எங்கள் கட்சி சார்பில் சுகாஷ் மற்றும் காண்டீபன் கலந்து கொள்ள தயாராக இருந்த போதும், பயத்தின் காரணமாக அந்த விவாதத்தில் கலந்து கொள்வதைத் தவிர்த்த சுமந்திரன், ஏதோ அந்த விவாதத்தில் நான் கலந்து கொள்ளவில்லை என்பதால் தான் அவர் பங்கேற்கவில்லை என்று ஊடகங்களுக்கு கூறியதாக அறிந்தேன்.
சுமந்திரன் கூட்டமைப்பின் தலைவர் கிடையாது. அதன் பொருட்டே என்னுடைய கட்சியின் சட்ட ஆலோசகர்களை அந்த வாதத்திற்கு அனுப்பி வைத்தேன். ஆனால் சுமந்திரன் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் தகுதியையும் இழந்து இப்பொழுது சட்ட ஆலோசகராக இருப்பவருடன் நான் விவாதம் செய்ய வேண்டிய தேவையுமில்லை
தேர்தலுக்கு பின்னர் சுமந்திரனது பெயர் கூட உச்சரிக்கப்படமாட்டாது எனத் தெரிவித்தார் தமது கட்சி எப்போதும் சுமந்திரனுடன் பகிரங்க விவாதத்திற்கு வருவதற்கு தயாராகவே இருக்கின்றது என்றும் பின்வாங்கிய பின்னர் தம் மீது பழி சொல்வதாகவும் கஜேந்திரகுமார் குறிப்பிட்டுள்ளார்