2020ம் ஆண்டு பொதுத்தேர்தலில் போட்டியிடும் எம்.எ சுமந்திரனின் ஆதரவாளர்களால் மறவன்புலவு பகுதியில் சிவசேனை அமைப்பின் தலைவர் சச்சிதானந்தத்தினால் அமைக்கப்பட்டுவரும் கோவிலிலின் மூலஸ்தான வெளிப்புற சுவரில் நேற்றைய தினம் இரவு ஒட்டப்பட்டிருந்தது.
தேர்தல் விதிமுறைகளை மீறி கோவிலின் சுவரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது தொடர்பாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் சச்சிதானத்தத்தினால் வழங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு பின்னர் சாவகச்சேரி பொலிஸாரினால் குறித்த சுவரொட்டிகள் அகற்றப்பட்டன.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த சச்சிதானந்தம் அவர்கள் சைவ சமயத்தை இழிவு படுத்தும் விதத்த்தில் சைவக் கோவில்களின் மூலஸ்தானத்தில் தனது பாதாதைகளை ஒட்டியிருக்கின்றார் எனவும், அவருடைய செயற்பாடுகள் சைவ சமயத்த்னை அவமதிப்பதாக தென்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்