யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இறுதி இரு வேட்பாளர்களின் விருப்பு வாக்கு எண்ணிக்கை தொடர்பில் நள்ளிரவு தாண்டியும் பாரிய குழப்பம் நீடித்து பதற்ற நிலை ஏற்பட்டத்தை அடுத்து அங்கு கூடியிருந்தவர்கள் மீது அதிரடி படையினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். யாழில் கூட்டமைப்புக்கு கிடைத்த ஆசனங்கள் மூன்றில் முதல் ஆசனத்தை சிறிதரன் வென்றிருந்தார்.
இந்நிலையில் ஏனைய இருவர் சசிகலாவா, சித்தார்த்தனா என்ற குழப்பம் நீடித்தது. இந்நிலையில் சசிகலா முன்னிலை பெற்றதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் சித்தார்த்தனர் சுமந்திரன் இடையே போட்டி நிலவியது.
தொடர்ந்து மானிப்பாய் தொகுதி வாக்குகளை மீள எண்ணுமாறு சுமந்திரன் தரப்பு கோரிய நிலையில் வாக்குகள் மீள எண்ணப்பட்டது. இறுதியில் 2ம் இடத்தை சுமந்திரனும் 3ம் இடத்தை சித்தார்த்தனும் பெற்று வெற்றியடைந்ததாக முடிவு கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையில் மோசடி இடம்பெற்றது என தெரிவித்து யாழ் மத்திய கல்லூரி வாக்கெண்ணும் நிலையத்தில் நின்றவர் அங்கு வந்த சுமந்திரனுக்கு எதிராக எதிர்ப்பில் ஈடுபட்டனர். இந்தசந்தர்ப்பத்தில் சுமந்திரனின் பாதுகாப்புக்கு வந்த அதிரடிப்படையினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வலி தெற்கு பிரதேச சபை உறுப்பினர் தவராசா துவாரகன் மாவை சேனாதிராசாவின் மகன் அமுதன் உட்பட சிலர் காயமடைந்துள்ளனர்.