சீரற்ற காலநிலை: உயர்தரப் பரீட்சை காலவரையறையின்றி ஒத்திவைப்பு – GIT பரீட்சையும் ரத்து

SUB EDITOR
0 Min Read

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

அத்துடன், ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைக்கான புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்று ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் டிசம்பர் 6 ஆம் திகதி நடைபெறவிருந்த பொது தகவல் தொழில்நுட்பம் (General Information Technology – GIT) பாடத்துக்கான பரீட்சையும் இடம்பெறமாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைவரும் புதிய திகதி அறிவிக்கப்படும் வரை அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Share this Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version