லங்கா சதொச நிறுவனம் ஆறு அத்தியாவசியப் பொருள்களின் விலைகளை மீண்டும் குறைத்துள்ளது. அனைத்து சதொச விற்பனை நிலையங்களிலும் இந்த விலை குறைப்பு இன்று(ஜூன் 1) முதல் அமுலுக்கு வருகிறது.
நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, 1 கிலோ கடலை 05 ரூபாவால் குறைக்கப்பட்டு 545 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. 1 கிலோ கோதுமை மாவின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டு 210 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. 1 கிலோ சிவப்பு பருப்பு 11 ரூபாவால் குறைக்கப்பட்டு 314 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
1 கிலோ பெரிய வெங்காயம் 14 ரூபாவால் குறைக்கப்பட்டு 115 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. 1 கிலோ வெள்ளை நாடு 04 ரூபாவால் குறைக்கப்பட்டு 175 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. 1 கிலோ வெள்ளை சீனி 10 ரூபாவால் குறைக்கப்பட்டு 229 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.