சாவகச்சேரி நகரசபைக்குள் 11 வீதிகள் காப்பெட் வீதிகளாகவுள்ளது.
அரசாங்கத்தின் ஒரு இலட்சம் கிலோமீற்றர் வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சாவகச்சேரி நகரசபை எல்லைக்குள் இரண்டாம் கட்டமாக 15 கிலோமீற்றர் நீளம் கொண்ட பதினொரு வீதிகள் காபெட் வீதிகளாக செப்பனிடுவதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளன.
தெரிவு செய்யப்பட்ட வீதிகளது விபரம் வீதி அபிவிருத்தி அதிகார சபையினரால் சாவகச்சேரி நகரசபைக்கு தகவலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
சங்கத்தானை-சப்பச்சி மாவடி வீதி, சோலை அம்மன் வீதி, பங்களா வீதி, ஆசிரியர் வீதி, சித்தன்மாவடி வீதி, கார்த்திகேசு வீதி, ஆடியம்பிட்டி வீதி,சண்முகம் வீதி,பத்தினியார் துரவு வீதி, தம்புதோட்டம் வீதி மற்றும் பெருங்குளம்-சங்கத்தானை வீதி ஆகிய பதினொரு வீதிகளே இவ்வாறு புனரமைப்பிற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளன.