இலங்கை சாரணர் சங்கம், யாழ் கொக்குவில் இந்து கல்லூரி சாரணர் பயிற்சி நிலையத்தில் சாரண ஆசிரியர்களுக்கான பயிற்சி நெறியை நேற்று (மார்ச் 29) ஆரம்பித்துவைத்தது.
யாழ் மாவட்ட சாரண ஆணையாளர் திரு. மருதலிங்கம் பிரதீபன் (மேலதிக அரச அதிபர்) தலைமையில் இப் பயிற்சி நெறியானது நேற்றும் இன்றும் நடைபெற்று வருகின்றது.
இந்த ஆரம்ப நிகழ்வில் பிரதம விருந்தினராக வலயக் கல்வி பணிப்பாளர் திரு. முத்து. ராதாகிருஷ்ணன் அவர்களும் சிறப்பு விருந்தினராக யாழ் கொக்குவில் இந்து கல்லூரியின் அதிபரும் உதவி மாவட்ட ஆணையாளருமான திரு. ம.ஞானசம்பந்தன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
பயிற்சிநெறியின் தலைவராக க. துற்ஜெயந்தன் (ALT), உதவி மாவட்ட ஆணையாளரும் (நிர்வாகம்) பிரதித் தலைவராக தேசிய தலைமையக ஆணையாளர் திரு.ப. அஜித்குமார் (LT) அவர்களும் வளவாளராக திரு யோ.கேதீசன் (ALT) திருமதி. E.I.தேவமித்ரன் (ALT) மற்றும் உதவி மாவட்ட ஆணையாளர்கள் திரு கோ.சத்தியன் (நிகழ்ச்சி), திரு ஆ .றஜீவன் (பயிற்சி) திருமதி. கவின்ஞா நவஜீவா (பெண்கள் சாரணியம்), திருமதி பிறைசினி அருள்சந்திரன் (குருளை), திரு. ந லிங்கேஸ்வரன் (நல்லூர் பிரதேசம்), திரு. சி. சிறிதரன் தகவல் தொழினுட்பம் & ஊடகம் அவர்களும் மாவட்ட சாரண ஆசிரியர்கள் திரு. ந.மஞ்சுதன்,திரு.ச.சத்தியஜித்,திரு.ச.யேஜீவன் ஆகியோரும் யாழ் வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையின் அதிபர் திருமதி. ரஜினிதேவி முத்துக்குமாரன் அவர்களும் கலந்து கொண்டனர்.