ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (ஜனவரி31) யாழ்ப்பாணமாவட்டத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டு யாழ்ப்பாண மாவட்டஒருங்கிணைப்பு குழு கூட்டம் மற்றும் பல பொதுக் கூட்டங்களில் அவர் கலந்துகொண்டதுடன் வடக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்துஜனாதிபதி இதன்போது அவதானம் செலுத்தியிருந்தார்.
இதேவேளை யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் சனாதிபதிஅநுரகுமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (ஜனவரி 31) யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திற்கு வருகை தந்த சனாதிபதிஉள்ளிட்டவர்களை ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள்வரவேற்று வரவேற்புரையாற்றினார்.
வரவேற்புரையினைத் தொடர்ந்து யாழ் மாவட்ட மக்களின் தேவைப்பாடுகள்தொடர்பான முன்வைப்பு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும்ஒருங்கிணைப்புக் குழுவின் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன்அவர்களினால் முன்வைக்கப்பட்டது.
சனாதிபதி அவர்களினால் மக்களின் தேவைப்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டு, மிக முக்கியமான தீர்வுகளும் அறிவிப்புக்களும் வழங்கப்பட்டது.
இக் கூட்டத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும்சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, வடக்கு மாகாண ஆளுநர்நாகலிங்கம் வேதநாயகம், பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கருணாநாதன் இளங்குமரன், சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜா, கௌரவ ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், இராமநாதன் அர்ச்சுனா, வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம், வடக்குமாகாண அமைச்சின் பிரதம செயலாளர் இ. இளங்கோவன் மாகாண அமைச்சின்செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக பதவிநிலைஉத்தியோகத்தர்கள், பிரதி பொலிஸ்மா அதிபர், யாழ் மாவட்ட பாதுகாப்புபடைகள், கடற்படை மற்றும் விமானப்படை கட்டளை தளபதிகள் மற்றும் திணைக்களத் தலைவர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின்பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், கமநல சேவைஅமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் மாவட்ட செயலகஉத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.