நெடுந்தீவு பிரதேச செயலகப் பிரிவில் எதிர்வரும் வாரத்தில் கொவிட் 19 தடுப்பூசிகள் வழங்கும் செயற்பாடு இடம் பெறவுள்ளது.
இது தொடர்பான திட்டமிடல் விழிப்புனர்வு கலந்துரையாடல் நேற்றைய தினம் (;ஜீலை 10) பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் தலமையில் இடம் பெற்றது.
கொவிட் 19 தடுப்பூசியானது 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் செலுத்தப்படவுள்ளதால் தவறாது அனைவரும் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றது. நெடுந்தீவினை சார்ந்த அனைவரும் தவறாது இச் சந்தர்ப்பத்தினை பயன்படுத்துமாறு வேண்டப்படுகின்றீர்கள்.
நெடுந்தீவு மேற்கு சைவப்பிரகாச வித்தியாலயம், றோ.க.மகளிர் கல்லூர்p, பிரதேச வைத்தியசாலை, மகாவித்தியாலயம், சுப்பிரமணிய வித்தியாலயம் ஆகிய ஐந்து இடங்களில் குறிப்பிட்ட நாளில் தடுபு;பூசி செலுத்தும் செயற்பாடு இடம் பெறும்.
நெடுந்தீவில் வாழ்வோரும் குறிப்பாக நெடுந்தீவுப் பதிவுடன் நெடுந்தீவிற்க வெளியில் வாழ்ந்திருப்போரும் தவறாது தீவகத்திற்கு வருகை தந்து தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள். 30வயதிற்கு மேற்பட்ட 2534 பேருக்கு தடுப்பூசிகள் தேவை என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அனைவரும் வருகை தந்து தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வது அவசியம்.
தேவைற்ற அநாவசிய கருத்துக்களைத் தடுத்து தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டு எதிர்காலத்தில் கொவிட் பரம்பலைக் கட்டுப்படுத்த யாவரும் ஒத்தழைப்பு வழங்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.