யாழ்;ப்பாண மாவட்டத்திற்கு வருகை தந்த இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷா அவர்கள் பொதுமக்களுக்கான கொவிட் 19 தடுப்பூசி வழங்கும் திட்டத்தினை நேரில் சென்று ஆராய்ந்துள்ளார்.
யாழ்ப்பாண மாநகரத்தின் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் கொவிட் 19 தடுப்பூசி செலுத்தும் நிலையமான அரியாலை பிரப்பன் குளம் மகா மாரியம்மன் திருமண மண்டபத்திற்கு அமைச்சர் நாமல் இராஜபக்ஷா அவர்கள நேரில் சென்றிருந்தார்.
ஜனாதிபதியின் அறிவுறுத்தலில் யாழப்;பாண மாவட்டத்திற்கு முதற்கட்டமாக 50 ஆயிரம் கொவிட் 19 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. மக்கள் அச்சமின்றி தமக்கான தடுப்பூசியினை ஏற்றிக் கொள்ள முடியும் என்று அமைச்சர் நாமல் இராஜபக்ஷா தெரிவித்தார்.
ஆமைச்சர் நாமல் இராஜபக்ஷா அவர்களுடன் அமைச்சர் டக்களஸ் தேவானந்தா அவர்கள், ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவர் நாடளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்கள், மாவட்ட செயலாளர் மகேசன் அவர்கள், வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளம் மருத்துவர் ஆ.கேதிஸ்வரன் அவர்கள் பொதுஜன பெரமுன கட்சியின் யாழ்மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தம்பித்துரை ரஜீவ் அவர்கள் மற்றும் பல முக்கியத்தர்கள் கலந்து கொண்டனர்