கொழும்பின் புறநகரான மாலம்பே பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகன் மற்றும் மகள் விஷம் அருந்தி உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த தாய்க்கு 35 வயதெனவும், மகனுக்கு 10 வயதெனவும், மகளுக்கு 9 வயதெனவும் தெரியவந்துள்ளது.
மாலம்பே, கஹந்தோட்டையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தந்தை விஷம் அருந்தி உயிரிழந்த நிலையில் இவர்கள் மூவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவர்களது தந்தையின் ஏழு நாள் நினைவு தானம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதுடன், தந்தை இறந்த சோகத்தில் இரண்டு பிள்ளைகளுடன் தாயும் உயிரை மாய்த்திருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.