முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பிலான வழக்கினை தொடர்ந்து நடாத்த முடியாது என சட்டமா அதிபர் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் உட்பட ஆறு பேருக்கு எதிராக சட்டமா அதிபரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பான விசாரணைகள் கடந்த பல வருடங்காள தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த நிலையில் இன்று மீண்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, சட்டமா அதிபர் சார்பில் மன்றில் ஆஜராகிய அரச சட்டத்தரணிகள், குறித்த வழக்கினை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.
இதனையடுத்து பிள்ளையான் உட்பட ஆறு பேருக்கு எதிரான வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றித்தினால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட ஐந்து பேர் சந்தேகத்தின் பேரில் கடந்த 2015 ஆண்டு கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது