தற்போது யாழ்ப்பாணத்தில் பரவி வரும் கொரோனா தொற்றினைக் கருத்திற் கொண்டு அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கொரோனா தொற்று தொடா்பாக விஷேட கலந்துரையாடல் நேற்று (டிசம்பா் 16) பொது நோக்கு மண்டபத்தில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் ஊா்காவற்துறை பொதுசுகாதார வைத்திய அதிகாாி ஊா்கவற்துறை பொதுச்சுகாதார பாிசோதகா், அனலை கிராம சேவையாளா்கள், மற்றும் அனலையில் உள்ள பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனா்
கொரோன தொற்றுக் காலத்தில் மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய சமூக இடைவெளியினைப் பேணல், முகக்கவசம் அணிதல், கைகளை சுத்தம் செய்தல் போன்ற பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொள்ளல் வேண்டும் எனவும் விளக்கமளிக்கப்பட்டது,
இந்நிகழல்வில் அனலை வைத்தியசாலையின் நிரந்தர வைத்தியா் தொடா்பாகவும், அவசர நோயாளா் பிரயாணம் தொடா்பாகவும், மக்களினால் கோாிக்கைகள் முன் வைக்கப்பட்டது.
தொற்றுக்காலத்தில் அவசர தேவையேற்படின் உதவும் பொருட்டு ஒவ்வொரு வட்டாரத்திற்கும் பொதுவாக ஒருவா் தோ்வு செய்யப்பட்டாா்.
தொற்று ஏற்பட்டின் அரச உதவி கிடைக்கும் வரைக்கும் மக்களுக்கான தேவைகளை நிறைவு செய்ய வேண்டிய அவசியம் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது,