கிளி மக்கள் அமைப்பின் கற்பகா திட்டம் – 21
கிளிநொச்சி மக்கள் அமைப்பின் கற்பகாதிட்டத்தின் 21வது நிகழ்வு இன்று கிளிநொச்சி மத்திய கல்லூியில் இடம் பெற்றது.
கிளிநொச்சி மத்திய கல்லூியின் 93வது ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு 93 மரங்கள் பாடசாலை வளாகத்தில் நாட்டப்பட்டதோடு 1001 பயன்தரு பழமரக்கன்றுகளும் மாணவா்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது,
சிதம்பரப்பிள்ளை இரட்ணம் குடும்பத்தரும், பிரான்சிஸ் ரவிந்திரன் குடும்பத்தினரும் இச் செயற்றிட்டத்திற்கான பங்களிப்பினை வழங்கி வைத்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி மத்திய கல்லூி அதிபா் திரு.புலோகராசா தலமையில் இடம் பெற்ற நிகழ்வில் யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளா், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைப் பணிப்பாளா், வைத்தியா்கள், கோட்டக்கல்வி பணிப்பாளா், கிளி மக்கள் அமைப்பின் இணைப்பாளா் என பலரும் கலந்து கொண்டனா்.
பசுமைப் புரட்சிக்கு வித்திடும் வகையில் மரக்கன்றுகள் பனை விதைகள் நடுதல் போன்ற 20 செயற்றிட்டங்களை தொடா்ச்சியாக மேற்கொண்டு வந்து இன்று 21வது செயற்றிட்டம் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.