நாட்டில் கொரோனா தொற்று நோய் அகன்று போக வேண்டி யாழ் மறை மாவட்ட ஆயர் தலைமையில் இன்று (அக்டோபர் 24) விசேட ஆராதனை இடம்பெற்றது.
யாழ்ப்பாணம், திருகோணமலை, மன்னார் மற்றும் மட்டக்களப்பு ஆகிய நான்கு தமிழ் மறை மாவட்டங்கள் அடங்கிய வட கிழக்கு ஆயர் மன்றத்தினரால் இன்றைய தினம் ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த ஆராதனை இடம்பெற்றது.
இதன்படி யாழ்ப்பாண மாவட்டத்தில் மரியன்னை தேவாலய சிற்றாலயத்தில் யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசத்தின் பங்கு பற்றுதலோடு ஆராதனை இடம்பெற்றது.