யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்தமைதொடர்பிலான வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அருச்சுனாஇராமநாதன் மற்றும் சட்டத்தரணி என். கௌசல்யா ஆகியோரை தலா ஒருஇலட்சம் ரூபாய் பெறுமதியான ஆள் பிணையில் செல்ல யாழ். நீதவான்நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவந்துள்ளதாவது,
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் கடந்த வாரம் நாடாளுமன்றஉறுப்பினர் வைத்தியர் அருச்சுனா மற்றும் சட்டத்தரணி என். கௌசல்யாஆகியோர் அத்துமீறி நுழைந்துள்ளனர்.
அங்கு கடமையாற்றிய வைத்தியர்களுக்கு இடையூறு விளைவித்ததாகவைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி யாழ்ப்பாண பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார்நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தனர்.
குறித்த வழக்கு இன்று திங்கட்கிழமை (டிசம்பர் 16) யாழ் . நீதவான் நீதிமன்றில்விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது ,குற்றம் சாட்டப்பட்ட வைத்தியர்மற்றும் சட்டத்தரணி ஆகிய இருவரும் மன்றில் முன்னிலையாகி இருந்தனர்.
அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது , வைத்தியசாலைக்குள் பணிப்பாளரின் அனுமதி இன்றி அத்துமீறி நுழைதல் , முறைப்பாட்டாளருக்கு இடையூறு விளைவித்தல் போன்ற செயற்பாடுகளில்ஈடுபட கூடாது என சந்தேகநபர்களுக்கு அறிவுறுத்திய நீதவான், சந்தேகநபர்களை தலா ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான ஆள் பிணையில் செல்லஅனுமதித்தார்.
குறித்த வழக்கினை மேற்கொண்டு நடாத்துவது தொடர்பில் சட்டமா அதிபரின்ஆலோசனைகளை பெறுமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்திய நீதவான், வழக்கினை எதிர்வரும் 2025 பெப்ரவரி 07ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.