நாட்டில் கோவிட் -19 நோயால் மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் இன்று வெள்ளிக்கிழமை இரவு அறிவித்துள்ளது.
66, 75, 78, வயதுடைய பெண்கள் மூவரும் 52 வயதுணைய ஆண் ஒருவருமே உயிரிழந்துள்ளனர். பெண்களில் ஒருவர் அநுராதபுரம் வைத்தியசாலையில் நேற்று மாலை உயிரிழந்த வவுனியா உளுக்குளத்தைச் சேர்ந்தவர்.
இதன்மூலம் நாட்டில் கோவிட் -19 நோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 191ஆக உயர்வடைந்துள்ளது.
நாட்டில் இன்று 674 பேர் கோவிட் -19 நோய்த் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என்று கண்டறியப்பட்டுள்ளது.