நெடுந்தீவில் இருந்து இறுதியாக அடையாளம் காணப்பட்டவர்களினை தவிர்ந்த அனைவரும் கொரோனா சிசிச்சை முடிந்து நெடுந்தீவிற்கு வருகை தந்துள்ளனர்.
நேற்றைய தினம் (Aug – 13) 04 பேர் கொரோனா சிசிச்சை முடிந்து நெடுந்தீவிற்கு வருகை தந்துள்ளனர் இவர்களில் ஒருவர் கண் பார்வையற்றவர் இவர்களை பொறுப்பற்ற விதத்தில் அம்புலன் படகின்றி பொருட்கள் ஏற்றி இறக்கும் படகில் அனுப்பி வைத்துள்ளதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக வேலணை சுகாதார பணிமனையுடன் தொடர்பு கொண்ட போது அம்புலன்ஸ் படகினைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும், அவை பயன்படுத்தப்பட முடியாத நிலமை காணப்படுவதாகவும் அதனை பெற்றுக்கொள்ள முடியாத நிலமையிலேயே பொருட்கள் ஏற்றும் படகில் ஏற்றி அனுப்பியதாகவும் தெரிவித்தனர்.
படகு உரிமையாளர்களுடன் தொடர்பு கொண்ட போது சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ப்பட்டு தனியான முறையில் அமர வைத்து அவர்களை அனுப்பி வைத்ததுடன் படகு பணியாளர்களுக்கும் பாதுகாப்பு முகக்கவசங்கள், கையுறைகள் என்பன வழங்கப்பட்டது எனவும் தெரிவித்தனர்.
நெடுந்தீவு வைத்தியசாலைக்கு சொந்தமாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிமனையினால் வழங்கப்பட்ட அம்புலன்ஸ் படகு மற்றும் கியுமெடிக்கா அம்புலன்ஸ் படகு என இரண்டு கடற்போக்குவரத்துக்கான அம்புலன்ஸ் படகுககள் காணப்படுகின்ற போதும், உரிய முறையில் கொரோனா சிசிச்சைக்கு கொண்டு செல்பவர்களும், மீளவும் திரும்பி அழைத்து வருபவர்களும், பாதுகாப்புடன் அழைத்து வரவேண்டிய செயற்பாடுகளை சுகாதார துறையினரும் உரிய அதிகாரிகளும் மேற்கொண்டு வழங்குதல் வேண்டும்.
ஏற்கனவே கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களை கால் நடையாக அழைத்து சென்றுள்ளார்கள் என்ற குற்றச்சாட்டும் நெடுந்தீவு மக்கள் மத்தியில் காணப்படுகின்றது.