இலங்கையில் கொரோனாத் தொற்றினால் இந்த வாரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.
அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணொருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார்.
மதவாச்சி பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சுவாசக் கோளாறு காரணமாக மதவாச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்,மேலதிக சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.