கொரோனாத் தொற்றால் இருவர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
கொரோனத் தொற்றால் உயிரிழந்த இருவரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று சுகாதார அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் தற்போது கொரோனத் தொற்றின் புதிய திரிபு வேகமாகப் பரவி வருகின்றது. அங்கு நாளாந்தம் 5 ஆயிரம் உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன என்று சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன.
இந்தியாவிலும் இந்தப் புதிய கொரோனா வைரஸ் திரிபு இனங்காணப்பட்டுள்ள நிலையில், இந்திய மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இலங்கையில் அனைத்து கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளும் கைவிடப்பட்டுள்ள நிலையில், கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.