கொரோனா வைரஸ் தொற்றினால் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் பிரான்ஸில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம்- மல்லாகத்தை பிறப்பிடமாக கொண்ட பாலச்சந்திரன் அஜந்தன் (வயது-40) என்ற இளைஞரே இவ்வாறு கொரோனாவுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞன், சுமார் 1 மாதகாலமாக பிரான்ஸில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். மேலும் இந்த இளைஞரின் இறுதிச்சடங்குகள் தனிமைப்படுத்தல் சட்ட விதிகளின் கீழ் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.