கொடிகாமம் சந்தியில் அண்மையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையால் பொருத்தப்பட்ட சமிக்ஞை விளக்குகள் இன்றைய தினம் அதன் கட்டுப்பாட்டு தொகுதி பொருத்தப்பட்ட நிலையில் பரிட்சார்த்தமாக செயற்படுத்தப்பட்டன.
இதற்கான பிரதான மின்வழங்கல் ஒரு சில நாட்களில் இணைக்கப்பட்டு அடுத்த வாரமளவில் வைபவரீதியாக மின்விளக்குகள் செயற்படுத்தல் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
பருத்தித்துறை வீதி கொடிகாமம் கச்சாய் வீதி ஆகியன ஏ9 வீதியில் இணையும் கொடிகாமச் சந்திப் பகுதியில் அடிக்கடி வீதி விபத்துக்கள் இடம்பெறுவதையடுத்து தென்மராட்சி பிரதேச மக்கள் கொடிகாமம் வர்த்தக சங்கத்தினர் சாவகச்சேரி பிரதேசசபை ஆகியோர் இணைந்து கொடிகாமச் சந்தியில் வீதிச் சமிக்கை ஒளி விளக்கு பொருத்தப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பாக வீதி அபிவிருத்தி அதிகார சபையினரிடம் விடுத்த கோரிக்கையின் பயனாக குறித்த சமிக்ஞை விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
குறித்த சமிக்கை விளக்கு 90இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.