தற்போதைய நிலையில் குருதி தட்டுப்பாடு யாழ் போதனா வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ளது.இதனை கருத்தில் கொண்டு கோண்டாவில் கிழக்கு அற்புதநர்த்தன விநாயகர் சனமூக நிலையமும் குமரன் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டிலும் இரத்தான முகாம் 20.12.2020 அன்று காலை 8.30 மணி தொடக்கம் இருபாலை வீதி கோண்டாவிலில் அமைந்துள்ள குட்டிச்சுட்டி முன்பள்ளியில் இடம்பெற இருக்கின்றது.
இக்கட்டான சூழ்நிலையில் ஒவ்வொருவரின் பங்களிப்பும் பல உயிர்களை காப்பாற்றும்.
குருதி கொடையாளர்கள் நீங்களாகவே முன்வந்து இந்த சந்தர்ப்பத்தில் வழங்குங்கள்.சாவின் அருகில் சென்று திரும்பியவன் நம்மை தெய்வமாக கும்பிடுவான் .
குருதி கொடையாளர்களை ஊக்குவிக்கும் முகமாக ரீசேட் வழங்கப்படுகின்றது.ஏற்பாடு செய்தவர்களுக்கு வாழ்த்துக்கள்
உதிரம் கொடுத்து உயிரை காப்போம்