நெடுந்தீவு குறிக்கட்டுவான் கடற்போக்குவரத்தில் ஈடுபட்டு வரும் பல நோ.கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான சமுத்திரதேவா படகு மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான குமுதினிப்படகும் கடந்த இரு நாட்களில் பழுதடைந்தமையில் மக்களது கடற்போக்குவரத்து பாதிநெடுந்தீவு குறிக்கட்டுவான் கடற்போக்குவரத்தில் ஈடுபட்டு வரும் பல நோ.கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான சமுத்திரதேவா படகு மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான குமுதினிப்படகும் கடந்த இரு நாட்களில் பழுதடைந்தமையில் மக்களது கடற்போக்குவரத்து பாதிப்படைந்திருந்தது.
ஆயினும் பல நோக்கு கூட்டுறவுச்சங்கம் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் துரிதமாக செயற்பாடுகளை மேற்கொண்டு தற்போது திருத்தம் செய்துள்ளனர் நேற்று (ஜீலை 26) மாலை 4.00 மணிக்கு நெடுந்தீவு துறைமுகத்தில் இருந்து சமுத்திரதேவா படகு பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டது. அதே போல் குறிகட்டுவான் துறைமுகத்தில் வைத்து குமுதினிப்படகு திருத்தம் செய்யப்பட்டு நெடுந்தீவுக்கு சென்றுள்ளது. வழமை போல் இன்று தொடக்கம் குமுதினி மக்கள் சேவையில் ஈடுபடும் எனத் தெரிவிக்கப்படுகின்றது