நெடுந்தீவு குறிகட்டுவான் கடற்போக்குவரத்தில் நீண்ட காலமாக சேவையாற்றி வரும் குமுதினிப்படகு நாளை (நவம்பர் 23) முதல் ஒரு நாளைக்கு 03 தடவைகள் சேவையில் ஈடுபடும் என நெடுந்தீவு பிரதேச செயலாளர் திரு.எவ்.சி.சத்தியசோதி அவர்கள் தெரிவித்துள்ளார்.
தற்போதைய கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக சுகாதார நடவடிக்கைகளைக் கருத்திற் கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து சேவைகளும் மட்டுப்படுத்தப்பட்ட பிரயாணிகளுமே போக்குவரத்தினை மேற்கொண்டு வருகின்றார்கள். இதன் காரணமாக நெடுந்தீவு பொது மக்களும் வெளியூரில் இருந்து வந்து நெடுந்தீவில் பணியாற்றும் உத்தியோகத்தர்களும் பல அசெகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்தனர்.
இதனால் அதிகாலையிலேயும் நேரகாலத்தோடும் வருகை தந்து படகுக்காக மக்கள் காத்திருக்க வேண்டிய நிலையும் காணப்பட்டது. இதனைக் கருத்திற் கொண்டு குமுதினிப்படகு சேவையினை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
1. அதற்கமைவாக நெடுந்தீவில் இருந்து காலை 06.00 மணிக்கு புறப்படும் குமுதினி காலை 07.00 மணிக்கு குறிகட்டுவான் சென்றடைந்து மீண்டும் 08.00 நெடுந்தீவு நோக்கி புறப்படும்
2. காலை 10.00 மணிக்கு நெடுந்தீவில் இருந்து புறப்படும் குமுதினிப்படகு, 11 மணிக்கு குறிகட்டுவான் இறங்கு துறைமுகம் சென்று மீண்டும் 12.30 மணிக்கு நெடுந்தீவு நோக்கி புறப்படும்
3. மாலை 03.00 மணிக்கு நெடுந்தீவில் இருந்து புறப்படும் குமுதினி மாலை 04.00 மணிக்கு குறிகட்டுவான் சென்றடைந்து மீண்டும் மாலை 04.30 மணிக்கு நெடுந்தீவு நோக்கி புறப்படும்.
குமுதினிப்படகு நீண்டகாலiமாக நெடுந்தீவு மக்களது சேவையில் ஈடுபட்டுவருகின்றது தற்போது வடதாரகைப்படகு பழுதடைந்து நீண்டகாலமாக திருத்தம் செய்யப்படாது காணப்படுகின்றது நெடுந்தாரகை நெடுந்தீவு இறங்கு துறைமுகத்தில் தரித்து நிற்கின்றது இக்காலத்தில் குமுதினிப்படகு அதிக சேவையில் ஈடுபடுவதால் குமுதினிப்படகும் பழுதடைந்து விடுமோ என்ற அச்சமும் பயமும் நெடுந்தீவு மக்கள் மத்தியில் காணப்படுகின்றது ஏனெனில் குமுதினிப்படகு அடிக்கடி பழுதடைவது கடந்த காலங்களில் இடம் பெற்ற சம்பவங்ளே