நேற்றைய தினம் கொவிட் 19 தடுப்பூசி செலுத்தும நிகழ்வு நெடுந்தீவில் இடம் பெற்றது. இந் நிகழ்வினை கண்காணிப்தற்கு ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் உறுப்பினர் சிலர் நெடுந்தீவிற்கு வருகை தந்திருந்தனர்.
வருகை தந்த உறுப்பினர்கள் தடுப்பூசி செலுத்தும் நிகழ்வுகளைப் பார்வையிட்டதுடன் மக்களுடனும் கலந்துரையாடினர் மக்கள் கருத்து தெரிவிக்கும் போது நெடுந்தீவு மக்களது போக்குவரத்து மிக நீண்ட காலமாக பிரச்சனையாகவே காணப்படுவதாகவும் அதற்கான தீர்வினைப் பெற்று வழங்க ஆவண செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பாக வருகை தந்த உறுப்பினர்கள் கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா அவர்களுக்கு தொலைபேசியூடாக அழைப்பினை மேற்கொண்டு தொலைபேசியூடாக அமைச்சர் அவர்கள் மக்களுக்கு கருத்து தெரிவித்தார்.
அதன் போது போக்குவரத்து பிரச்சனை தொடர்பில் தான் கவனம் செலுத்தி நெடுந்தீவு குறிகட்டுவான் கடற்பரப்புக்கு ஏதுவான முறையில் குமுதினி போன்ற நவீன வசதிகள் கொண்ட படகை மிக விரைவாக கட்டுமானம் செய்து வழங்க ஆவண செய்வதாக உறுதியளித்தார்.
அத்துடன் பழுதடைந்த நிலையில் காணப்படும் குமுதினிப்படகினை மிக விரைவாக திருத்தம் செய்வதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊடாக நடவடிக்கை மேற்கொள்வதாகவும் உறுதி மொழி வழங்கினார்.
கௌரவ அமைச்சர் டக்களஸ் தேவானந்த அவர்கள் தேர்தல் பிரச்சாரத்திற்காக நெடுந்தீவிற்கு வருகை தந்த போது தேர்தல் முடிவடைந்த ஒரு மாதத்தின் பின்னர் நெடுந்தீவிற்கு விஜயம் மேற்கொண்டு அனைத்து விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடி நெடுந்தீவு மக்களது பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு பெற்று வழங்கப்படும் என உறுதி மொழி வழங்கிய போதும் இது வரை வருகை தரவில்லை என்பது நெடுந்தீவு மக்களது கருத்தாக காணப்படுகின்றது ஆயினும் மிக விரைவாக நெடுந்தீவிற்கு விஜயம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.