யாழ் மாவட்ட மக்கள் கொரோன தொற்று ஏற்படாதவாறு இவ் வருட நத்தாரைக் கொண்டாட வேண்டும் என யாழ் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபா் மகேஸ் சேனாரட்ன தொிவித்துள்ளாா்.
யாழ் மாவட்டத்தில் கொரோன தொற்றாளா்கள் அதிகாித்து வரும் சம்பவம் தொடா்பாக கருத்து தொிவிக்கும் போதே மேற்கண்டவாறு தொிவித்துள்ளா்ா
அவா் மேலும் தொிவிக்கையில் அதிகாித்து வரும் கொறோனா தொற்றாளா்கள் அடுத்து வரும் நாட்களில் யாழ் மாவட்ட மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டிய தேவைப்பாடு காணப்படுகின்றது. இதன் காரணமாக வரும் நாட்களில் நத்தாா் புதுவருட கொண்டடங்களை தவிா்த்து பாதுகாப்பாக இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
தனிமைப்படுத்தப்பட்டவா்கள் வீடுகளிலேயே இருந்து நத்தாா் பண்டிகையினை கொண்டாடுமாறும், சுகாதார துறையினா் விடுத்துள்ள அறிக்கைகளை பின்பற்றி அதற்கு கட்டுப்பட்டு நடக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளா்.
கொரோன தொற்று மேலும் பரவாது பாதுகாக்க நாம் அனைவரும் ஒன்றித்து செயற்படவேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளாா்.