மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் பணியாற்றும் கிராம சேவகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பெயரில் சக பெண் கிராம சேவகரின் கணவர் உள்ளிட்ட இருவர் இலுப்பக்கடவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலுப்பைக்கடவையில் இருந்து ஆத்திமோட்டை செல்லும் பாதையில் கடந்த 3ஆம் திகதி மாலை 7 மணியளவில் பயணித்த கிராம சேவகர் அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் அடித்துப் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகத்தின் அடிப்படையில் நேற்றைய தினம் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவரில் ஒருவர் இறந்த கிராம சேவகருடன் பணியாற்றும் பெண் கிராம சேவகரின் கணவர் என தெரியவந்துள்ளது.
உயிரிழந்த நபருக்கும், கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களுக்கும் இடையில் கொடுக்கல் – வாங்கல் பிரச்சனை இருந்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.