யாழ்ப்பாணத்தின் காரைநகரில் தீவிரமாக கடலரிப்பு இடம்பெற்றுவருவதாக பிரதேச மக்கள் கவலையுடன் கூறுகின்றனர்.
காரைநகர் வியாவில் பகுதியிலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துவருகின்றது. பெருமளவு நிலம் கடந்த பத்தாண்டுகளில் கடலினுள் விழுங்கப்பட்டிருக்கிறது என கரையோரத்தில் வாழும் மீனவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
பல வருடங்களிற்கு முன்னர் அதிகாரிகள் வந்து பார்வையிட்டுத் தடுப்பணை உருவாக்குவதாக உறுதியளித்ததாகவும் பின்னர் எதுவுமே இடம்பெறவில்லை என்றும் அந்த மகள் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும் யாழில் கடற்கரைகளில் கண்டல் தாவரங்களின் பெருக்கத்தினை ஊக்குவிப்பஹன்மூலமே இவ்வாறான இடர்களுக்கு தீர்வாக அமையும் என்று கூறப்படுள்ளது.