காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினால் இதுவரையில் 5,555 விசாரணைகள் பூர்த்திசெய்யப்பட்டுள்ள நிலையில் இவற்றில் சுமார் 4,200 விண்ணப்பங்கள் இடைக்கால நிவாரணத்திற்காக, இழப்பீட்டுக்கானஅலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக காணாமல்போன ஆட்கள்பற்றிய அலுவலகத்தின் உறுப்பினர் ரூபராஜா தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” இதுவரையில் எமதுகாணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கு 21,000முறைப்பாடுகள்கிடைக்கப்பெற்றன.
அவற்றில் முப்படையினர், பொலிஸார், இரட்டைப்பதிவுகள் நீக்கப்பட்ட நிலையில்14,988விண்ணப்பங்கள் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டன.
இவற்றில் 5,555 விசாரணைகள் பூர்த்திசெய்யப்பட்டுள்ள நிலையில் அவற்றில்4,200விண்ணப்பங்கள் இடைக்கால நிவாரண கொடுப்பனவுக்காக இழப்பீட்டுஅலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.