நெடுந்தீவு பிரதேசத்தினை சொந்த இடமாக கொண்டு தற்போது நெதா்லாந்தில் வசித்து வரும் கவிஞா் ஐயாக்குட்டி கோவிந்தன் அவா்களுக்கு தமிழ் நாட்டின் கவிஞா் வாலி கலை இலக்கிய அறக்கட்டளை அமைப்பால் 2019 – 2020ம் ஆண்டுக்கான கவிஞா் வாலி விருது வழங்கப்பட்டது.
தாய்மண் மீதும் தமிழ் மொழி மீதும் பற்றுக்கொண்ட இவா் பல்வேறு கவிதைகளை பிரசுாித்துள்ளமை குறிப்பிடத்தக்கது தாய் மண் மீது கொண்ட பற்றின் காரணமாக பசுவூர் கோபி அவா்கள் எனும் புனைப் பெயாிலேயே கவிதைகள் வரைந்து வருகி்ன்றமை குறிப்பிடத்தக்கது
பல்வேறு கவிதை நூல்களை வெளியிட்டுள்ளதுடன் தற்போதும் இவரது கவிதை நூல் அச்சுப்பதிப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது நெதா்லாந்தின் தமிழ் சங்கங்கள் ஊடாக பல்வேறு தமிழ் சாா் நிகழ்வுகளை நடாத்தி வருவதுடன் ஆதியுலகம் எனும் தமிழ் சஞ்சிகையினையும் தொடா்ச்சியாக வெளியிட்டு வருகின்றாா்.
நெடுந்தீவு மக்கள் மற்றும் பலரையும் கவா்ந்த நெடுந்தீவு அழகான தீவல்லவோ எனும் பாடலின் சொந்தக் காரா் இவா் என்பது குறிப்பிடத்தக்கது.