கற்கடதீவு தூய அந்தோனியார் ஆலய திருவிழா இன்று (மார்ச் 18) காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது.
திருவிழா. திருப்பலியை மண்டைதீவு பங்குத்தந்தை அருட்பணி செல்வரெட்ணம் அடிகளார் தலைமையேற்று ஒப்புக்கொடுத்தார்.
நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்பணி வசந்தன் அடிகளாரது நெறிப்படுத்தலுக்கு அமைவாக இடம்பெற்ற திருத் தின வழிபாட்டின் முதல்நாள் நேற்றுமுன்தினம் கொடியேற்றமும் தொடர்ந்து திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்ட துடன் நேற்றைய தினம் நற்கருணை வழிபாடு இடம்பெற்றது.
இன்று திருநாள் விழா திருப்பலியும், திருச்சொருப பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றது.
இத்திருப்பலியில் மண்டைதீவு எழுவைதீவு குருநகர் வலைப்பாடு மற்றும் மன்னாரிலிருந்தும் பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
கற்கடதீவானது மீனவர்கள் தங்கிநின்று மீன்பிடியில் ஈடுபடுவற்கு மாத்திரம் உகந்த பெளதீக நிலைமையை கொண்டிருப்பதுடன் மீனவர்களின் வழிபாட்டிற்காக சிறிய அளவிலான ஆலயம் புனித அந்தோனியாருக்கு அமைக்கப்பட்டு நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவையினால் விழா ஒழுங்குசெய்யப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கதாகும்.