கடற்தொழிலாளர் சங்கங்களின் சாமசகட்டிமும் சுற்றுப் புறமும்; சிரமாதனம் மூலம் துப்பரவு செய்யப்பட்டது
நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பின் அனுசரணையுடன் நெடுந்தீவு இளைஞர்கள் கடற்தொழில் சங்க அங்கத்தவர்கள் மற்றும் நலன் விரும்பிகளின் பங்களிப்புடன் நெடுந்தீவு கடற்தொழிலாளர் சங்கங்களின் சமாசக்கட்டிமும் அதன் சுற்றுப்புறமும் சிரமாதான அடிப்படையில் இன்று (நவம்பர் 25) சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது.
ஊரும் உறவும் அறிமுக நிகழ்வினைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக பாடசாலைகள், சேமக்காலைகள் பொதுக்கிணறுகள் கேணிகள் என அனைத்தும் சிரமாதான அடிப்படையில் துப்பரவு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அதன் ஒரு கட்டமாக இன்றைய தினம் கடற்தொழில் சங்கங்களின் சமாசகட்டிடமும் அதன் சுற்றுப்புறமும் சிரமதானம் இடம் பெற்றது. கடற்தொழிலாளர் சங்கங்களின் சமாசத்தின் தலைவர் திரு.பா.லீலியான் குருஸ் அவர்களது நெறிப்படுத்தலில் இச் செயற்பாடு சிறப்பாக நிறைவு பெற்றது
காலநிலை மாற்றங்கள் ஏற்பட்ட போதும் அனைவரும் உற்சாகத்துடன் இணைந்து கொண்டமை வரவேற்கத்தக்கதாகும்.