ஒரு லட்சம் ரூபாவுக்கு மேல் மாதாந்த வருமானம் பெறும் நபர்கள் வருமான வரி செலுத்தும் நடைமுறை இன்று (ஜனவரி 1) முதல் நடைமுறைக்கு வருகின்றது.
மாதாந்தம் ஒரு லட்ச ரூபாவுக்கு மேல் வருமானத்தை பெறும் அனைவரும், 6 சதவீதத்தில் இருந்து 36 சதவீதம் வரை வரி செலுத்த வேண்டி நேரிடும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார கல்விப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் பிரியங்க துனுசிங்க தெரிவித்தார்.
அதேவேளை, ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையின் வரி வீதம் குறைந்த மட்டத்திலேயே உள்ளது என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.