களுத்துறை – பாணந்துறை, மொரொன்தொடுவ பகுதியில் ஐந்து வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (ஜீலை 10) சிறுமியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது வீட்டில் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.பிறந்தநாள் நிகழ்விற்கு வந்த 35 வயதுடைய நபர் ஒருவர் அந்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து சிறுமியின் தந்தை மற்றும் மாமனார் சந்தேக நபரை தடி ஒன்றினால் தாக்கி கொலை செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடையவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.