நாட்டின் எரிபொருளுக்கான கேள்வி கணிசமான அளவு குறைந்துள்ளது என்று இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், ஆண்டு இறுதிக்குள் எரிபொருளுக்கான கேள்வி சுமார் 50 சதவீதம் குறைந்துள்ளது.
முன்னதாக மாதாந்தம் சுமார் 4 ஆயிரம் மெற்றிக் தொன் பெற்றோல் மற்றும் டீசலுக்கான கேள்வி இருந்த நிலையில் தற்போது அது 2 ஆயிரம் மெற்றிக் தொன்னாகக் குறைந்துள்ளது என்று இலங்கை பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடி, நுகர்வு கணிசமான அளவு குறைவு, கியு ஆர் முறைப்படி மட்டும் எரிபொருளை விநியோகித்தல், எரிபொருள் சேமிக்க நுகர்வோர்கள் முயற்சி எடுக்காமை உள்ளிட்ட பல காரணங்களால் எரிபொருளின் கேள்வி குறைந்துள்ளது.