எரிசக்தி அமைச்சின் பல ஊழியர்கள் கொவிட் தொற்றுக்குள்ளானதாக உறுதியானதையடுத்து அமைச்சர் உதய கம்மன்பில சுயதனிமைப்படுத்திக் கொண்டார்.
கிருமி தொற்று நீக்கம் காரணமாக இன்று முதல் ஓகஸ்ட் 6 வரை அமைச்சு மூடப்படும் என அமைச்சர் கம்மன்பில தெரிவித்தார்.
“அமைச்சின் பல அதிகாரிகள் வைரஸால் பாதிக்கப் பட்டிருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் எனக்கு மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜென் சோதனை எதிர்மறையாக இருந்தது” என அவர் ட்வீட் செய்துள்ளார்.
எனினும் நான் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுய தனிமைப்படுத்த முடிவு செய்தேன் என அமைச்சர் கம்மன்பில மேலும் கூறினார்.