எக்பிரஸ் பேர்ள் கப்பலின் உரிமையாளர்களான எக்ஸ்பிரஸ் பீடர்ஸ் நிறுவனத்தின் உள்ளுர் முகவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
செட்மில் குழுமநிறுவனங்களின் தலைவர் அர்ஜூன ஹெட்டியாராச்சியே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
விசாரணைகளின் போது கிடைத்த தகவல்களை தொடர்ந்தே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கப்பல் கப்டன் தலைமை நிறுவனம் மற்றும் உள்ளுர் முகவர் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற உரையாடல்களை அடிப்படையாக வைத்து அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என பொலிஸ்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
உள்ளுர் முகவர் அலட்சியமாக இருந்தார் என்பது தெரியவந்ததை தொடர்ந்து கைதுசெய்யப்பட்டுள்ளார் என பொலிஸ்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கைதுசெய்யப்படுவதற்கு முன்னர் அவர் இன்று இரண்டுமணித்தியாலங்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.