ஊரும் உறவும் நெடுந்தீவு அமைப்பினரால் கிணறுகள் கேணிகள் துப்பரவு செய்யும் பணிகள் தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்றது.
நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பினரின் பொது மாநாட்டை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட்ட நெடுந்தீவின் பொதுக்கிணறுகள் கேணிகள் தூர்வாரி துப்பரவு செய்யும் பணிகள் தொடர்ச்சியாக குறிப்பிட்ட அமைப்பினரால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
நெடுந்தீவு பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச சபையின் வழிகாட்டலில் இளைஞர்கள் பொதுமக்களின் உதவியுடன் இச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது. நீர்வளம் காப்போம் எனும் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் 03.10.2020 சனிக்கிழமை அன்று நெடுந்தீவு மேற்கு ஐயனார் கோவில் கேணியும் 04.10.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று நெடுஃமேற்கு மங்கையற்கரசி வித்தியாலயக் கிணறும் 05.10.2020 திங்கட்கிழமை அன்று நெடுஃமே மங்கையற்கரசி வித்தியாலயத்திற்கு அண்மையிலுள்ள கேணியும்இ 06.10.2020 செவ்வாக்கிழமை அன்று பிடாரி அம்பாள் கோவில் கிணறும் துப்ரவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தொடாச்சியாக நெடுந்தீவின் அனைத்து பகுதிகளிலும் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர் மழைக்கு முன்னர் இச் செயற்றிட்டத்தினை மேற்கொள்வது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்