நெடுந்தீவின் உறவுகளுக்கு வணக்கம்
ஊரும் உறவும் – நெடுந்தீவு அமைப்பின் அறிமுக நிகழ்வுடன் “ஆரோக்கியமான சமுதாயத்தினை நோக்கி” எனும் தொனிப்பொருளுடன் நெடுந்தீவின் உறவுகளாய் ஒன்றிணையும் மாநாடு 27.09.2020 ஞாயிறு காலை 9.00 மணிமுதல் மாலை 4.00 மணிவரை நெடுந்தீவு தேவா கலாச்சார மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
நாடு பூராகவும் உள்ள நெடுந்தீவின் உறவுகளுக்கு நிகழ்விற்கான அழைப்பிதழ் ஒழுங்கிணைப்பு குழுவினரால் வழங்கப்பட்டுவருகின்றது. அழைப்பிதழ் கிடைக்கப்பெறாத நெடுந்தீவின் உறவுகளுக்கு தகவலை கொண்டுபோய் சேர்க்க முடியுமான வரையில் கொண்டு சேர்க்க முயற்சி எடுங்கள்.
மேலும் ஞாயிறு காலை 6.30 மணிக்கு குறிகாட்டுவான் வரையிலான பேரூந்து ஒழுங்கமைப்பு, விசேட படகு சேவைகள், மற்றும் மாலை குறிகாட்டுவான் – யாழ்ப்பாணம் பேரூந்து சேவை ,நெடுந்தீவினுள் போக்குவரத்து வசதிகள், மற்றும் உணவு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஞாயிறு காலை 6.30 மணிக்கு யாழ் உணவகம் (கோவாலு கடை) முன்றலில் இருந்து பேரூந்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. (பேரூந்து இலக்கம் NP ND 2163)
போக்குவரத்து மற்றும் ஏனைய தொடர்புகளுக்கு
+94 (77) 676 0812. +94 (76) 529 0667, +94 (77) 344 7855, +94 (76) 283 9632, 0773921511, 0764658482, 0767479525, 0779020949, 0767402017