பள்ளிகளை சுத்தம் செய்வோம் எண்ணங்களில் வண்ணம் செய்வோம் எனும் தொனிப்பொருளில் ஊரும் உறவும் நெடுந்தீவு அமைப்பினால் நடைமுறைப்படுத்தப்படும் செயற்பாட்டின் கீழ் நெடுந்தீவில் உள்ள அனைத்து பாடசாலைகளையும், அதன் சுற்றுப்புறங்களையும் சிரமாதனப் பணி ஊடாக மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டு ஓக்டோபர் 11ம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் ஆரம்பமாக நெடுந்தீவு மேற்கு மங்கையற்கரசி வித்தியாலயத்தில் இருந்து செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நெடுந்தீவு பிரதேச செயலாளர் மதிப்பிற்குரிய திரு.எவ்.சி.சத்தியசோதி அவர்களின் நெறிப்படுத்தலில் தற்போதைய கொரோனா வைரஸ் தாக்கத்தினைக் கருத்திற் கொண்டு அதற்கேற்ற விதத்தில் செயற்படுத்தப்பட்டு வருகி;ன்றது
முதற்கட்டமாக கடந்த 11ம் திகதி நெடுந்தீவு மேற்கு மங்கையற்கரசி வித்தியாலயத்தில் (ஓக்டோபர் 11) பாடசாலை முதல்வர் திருமதி.ந.லோகேஸ்வரி மற்றும் பிரதேச செயலாளர் திரு.எவ்.சி.சத்தியசோதி அவர்களின் நெறிப்படுத்தலில் பாடசாலையின் பெற்றோர்கள், பழைய மாணவர்கள் நலன் விரும்பிகள் கலந்து கொண்டு செயலாற்றினர்
இச் சிரமதானத்தின் ஊடாக சுற்றுப்புறச் சூழல் துப்பரவு செய்யப்படடதுடன், மைதனத்திற்கான கல்வேலி சீரான முறையில் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாடசாலைக் கிணறு துப்பரவு செய்யப்பட்டு ஊரும் உறவும் நிகழ்வில் வழங்கப்பட்ட மரக்கன்றுகள் பாதுகாப்பான முறையில் நடப்பட்டன
அதிக செலவுகள் இன்றி பொதுப்பணிகளோடு ஒன்றித்து தீவகத்தின் மக்களின் பங்களிப்புடன் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளமை வரவேற்கத்தக்கவிடயமாகும்.
தொடர்ச்சியாக அனைத்து பாடசாலைகளிலும் இச் செயற்றிட்டம் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.