உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நட்ட ஈடாக 100 மில்லியன் ரூபாவை வழங்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உயர்நீதிமன்றம் இன்று (ஜனவரி 12) உத்தரவிட்டுள்ளது.
அதேநேரம், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன ஆகியோர் தலா 75 மில்லியன் ரூபா நட்டஈடாக வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ 50 மில்லியன் ரூபாவும், முன்னாள் தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானி சிசிர மென்டிஸ் 10 மில்லியன் ரூபாவும் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் அடிப்படை உரிமைகளை இந்த பிரதிவாதிகள் மீறியுள்ளனர் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது