இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் நெடுந்தீவு பிரிவினால் வறிய நிலையிலுள்ள மாணவர்கள் தங்கள் கல்வியைத் தொடர கல்வி ஊக்குவிப்புத் தொகை வழங்கப்பட்டு வருவதாக நெடுந்தீவு கிளையின் தலைவர் எ. அருந்தவசீலன் தெரிவித்துள்ளார்.
நெடுந்தீவு பிரதேசத்தில் கல்வி கற்று பல்கலைக்கழகம் சென்றோர் மற்றும் உள்ளூரில் தமது கல்வியைத் தொடர வறுமைநிலை தடையாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் என சுமார் 15 மாணவர்களுக்கு மாதாந்த கல்வி உதவுதொகை வழங்கப்பட்டு வருகின்றது.
நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயத்தில் இருந்து இவ் வருடம் யாழ் பல்கலைக்கழகம் சென்ற மாணவி மற்றும் ஏனைய பாடசாலைகளில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்குமாக அவர்களின் தேவை அடிப்படையில் ரூ. 5000.00 , 2000.00 என்ற அடிப்படையில் மாதாந்த கல்வி உதவு தொகை வழப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.