இந்தியாவுக்கும், காங்கேசன்துறைக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவையை அரசாங்கம் மார்ச் மாதம் ஆரம்பிக்கவுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு வழங்கிய பணிப்புரைக்கு அமைய இதற்கான ஆரம்பகட்ட கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசாங்கத்துடன் தூதரக அளவிலான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, சாதகமான பதிலைத் தொடர்ந்து இந்த ஆண்டு படகு சேவையை ஆரம்பிக்கத் திட்டமிடப்படுகின்றது என்று அரச செய்தி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
காங்கேசன்துறையிலா அல்லது மன்னாரிலா குடிவரவு ஆய்வு நிலையம், சுங்க அனுமதி நிலையம் மற்றும் துறைமுக அதிகார சபை நிலையம் என்பவற்றை அமைப்பது என்பது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளருக்கும் அரச திணைக்களங்களுக்கும் இடையே இடம்பெறவுள்ளன.