இதனையடுத்து, கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 124 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
சிலாபம் பகுதியை சேர்ந்த 66 வயதுடைய பெண்ணொருவர் கடந்த 30 ஆம் திகதி சிலாபம் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
அத்துடன், கொழும்பு 13 ஐச் சேர்ந்த 67 வயதுடைய ஆண் ஒருவர் தமது வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.
மேற்படி, உயிரிழந்தவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில், இரு உயிரிழப்புகளும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.